* நாகூர்ப் புராணம் இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், இலக்கியப் படைப்புகள் மற்றும் தமிழுடன் தொடர்புடைய பிற படைப்புகள் வெளியிடப்படுகின்றன.
* எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுப் படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை வெளியீட்டிற்காக அனுப்பலாம்.
* அனுப்பப்படும் படைப்புகள் படைப்பாசிரியரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
* பிறரின் படைப்புகளை நகலெடுத்தோ அல்லது உரிய அனுமதி இல்லாமலோ அனுப்பப்படும் படைப்புகள் வெளியிடப்படமாட்டாது.
* படைப்புகளில் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை மற்றும் மொழிநடைப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
* படைப்பாளர்கள் தங்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை படைப்புடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
* படைப்புடன் படைப்பாசிரியரின் சிறு அறிமுகக் குறிப்பு (Author Profile) இருந்தால் இணைக்கலாம்.
* பெறப்படும் அனைத்து படைப்புகளும் ஆசிரியர் குழுவின் (Editorial Board ) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.
* தேவையெனில் படைப்புகளில் மொழிநடை, எழுத்துப்பிழை மற்றும் வடிவமைப்பு தொடர்பான சிறிய திருத்தங்களை செய்ய ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு.
* வெளியிடப்படும் படைப்புகளின் கருத்துகளுக்கு படைப்பாளர்களே முழுப் பொறுப்பாளர்கள்.
* தேர்வு செய்யப்படும் படைப்புகள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி நாகூர்ப் புராணம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
* படைப்புகளை வெளியிடுவதற்கு எந்தவித கட்டணமும் பெறப்படாது. இது இலவச வெளியீட்டு வாய்ப்பு ஆகும்.
* படைப்புகளை nagorepuranam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* ஆசிரியர் குழுவின் முடிவே படைப்புகள் வெளியீடு தொடர்பான இறுதி முடிவாகும்.
0 Comments