1. பொதுத் தகவல்கள்

* நாகூர்ப் புராணம் (ISSN: 3139-4965) என்பது மதிப்பாய்வு செய்யப்பட்ட (Peer Reviewed) பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் ஆகும்.

* தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு, பண்பாடு, சமயம், கல்வி, மொழியியல், நாட்டுப்புறவியல் மற்றும் தமிழுடன் தொடர்புடைய பிற துறைகளின் அசல் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியீட்டிற்காக ஏற்கப்படும்.

* சமர்ப்பிக்கப்படும் கட்டுரை வேறு எந்த ஆய்விதழிலும், மாநாட்டு மலரிலும் அல்லது இணைய இதழிலும் முன்பே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.

* கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாசிரியரின் சொந்த ஆய்வுப் படைப்பாக இருக்க வேண்டும். கருத்து ஒற்றுமை (Plagiarism) கொண்ட கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.


2. கட்டுரை தயாரிக்கும் முறை

* கட்டுரை யூனிக்கோடு (Unicode) எழுத்துருவில் MS Word வடிவில் தயாரிக்கப்பட வேண்டும்.

* கட்டுரை A4 அளவில், Font Size 12, Line Spacing 1.15 என்ற அமைப்பில், அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* கட்டுரையில் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை மற்றும் மொழிநடைப் பிழைகள் இருக்கக் கூடாது.

* கட்டுரையில் தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், குறிச்சொற்கள், முன்னுரை, ஆய்வுப் பகுதி, முடிவுரை மற்றும் மேற்கோள் நூற்பட்டியல் ஆகியவை இடம்பெற வேண்டும்.

* ஆய்வுச் சுருக்கம் (Abstract), குறிச்சொற்கள் (Keywords) மற்றும் கட்டுரையாளரின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும்.


3. கட்டுரையாளர் விவரங்கள் 

* கட்டுரையாளரின் முழு பெயர், பணிநிலை, நிறுவனம், முழுமுகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டுரையின் முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.


4. மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்கள்

* அனைத்து மேற்கோள்களுக்கும் பொருத்தமான மேற்கோள் நூற்பட்டியல் (References) இணைக்கப்பட வேண்டும்.

* படங்கள், அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டால் அவற்றிற்கு பொருத்தமான தலைப்பு மற்றும் வரிசை எண் வழங்கப்பட வேண்டும்.


5. மதிப்பாய்வு மற்றும் வெளியீடு

* அனைத்து கட்டுரைகளும் முதன்மை ஆசிரியர் மற்றும் மதிப்பாய்வாளர்களின் (Peer Review) பரிசீலனைக்குப் பின்னரே வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்படும்.

* முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.

* வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கான ஒப்புதல் தகவல் கட்டுரையாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.


6. கட்டுரை சமர்ப்பித்தல்

* கட்டுரைகளை nagorepuranam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

* ஒவ்வொரு மாதமும் 05 ஆம் தேதி வரை பெறப்படும் கட்டுரைகள் பரிசீலனை செய்யப்படும்.

* ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி ஆய்விதழ் வெளியிடப்படும்.

* ஒவ்வொரு ஆய்விதழ் அதிகபட்சம் 10 ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும்.

* கட்டுரைகள் First In – First Out (FIFO) முறையில் பரிசீலிக்கப்படும்.


7. வெளியீட்டுக் கட்டணம்

* பேராசிரியர்கள் – ₹400/-

* முனைவர் பட்ட ஆய்வாளர்கள் – ₹350/-

* தமிழ் ஆர்வலர்கள் – ₹300/-

* கட்டுரை வெளியீட்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட பின்னரே கட்டணம் செலுத்த வேண்டும்.


8. பொறுப்புத் துறப்பு

* வெளியிடப்படும் கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துகளுக்கு கட்டுரையாளர்களே முழுப் பொறுப்பாளர்கள்.

* தேவையெனில் மொழிநடை, எழுத்துப்பிழை மற்றும் வடிவமைப்பில் சிறிய திருத்தங்களைச் செய்ய ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு.