Nagore Puranam
உணர்ந்திருந்தால் | கவிஞர் சூ. சிவராமன் | January 2025

உணர்ந்திருந்தால் | கவிஞர் சூ. சிவராமன் | January 2025


மாடு தேடிப் போன பொட்டல் வெளியில் சமைந்து விட்டவளின்

சங்கடமுணர்ந்திருந்தால்..

ஆளரவம் கேட்டு சாலையோர இருளில் எழுந்து நிற்கும் அவலம் உணர்ந்திருந்தால்..

ஈன்ற மூன்றாம் நாளே கரகம் சுமந்தவளின் கண்ணீர் உணர்ந்திருந்தால்...

இல்லறப் பெண்களின் சூன்யத்திற்குள் சிக்கிக்கிடந்திருந்தால்...

சிறியதொரு காதலின் வலி கண்டதற்காய்..

சொல்லத் துணிந்திருக்க மாட்டாய் தான். பெண் குலம் குறித்த இழிச் சொல்லை.

- கவிஞர் சூ. சிவராமன்

Post a Comment

0 Comments