எண்ணத்தை மாற்றுகையில்
எங்கிருந்தோ ஒரு குரல்
தடுக்கி விழுகையில் தாங்கிய ஒரு கை!
எழுத்தின் எத்தனையோ தோல்விகள் என்
தோள்மீது ஏறி நிற்க, தோழனாய்
தோள்கொடுத்துத் தாங்கியது!
எண்ணங்களை எழுத்தாக்கிய ஏழைக்கு
வண்ணத்தோடு வடிவம் கொடுத்தது!
காற்றில் பறந்த கனவுகள்
கணினியில் கதையானது!
என் கனவுகளுக்காக சிந்திய கண்ணீர்
பன்னீரின் வாசனையை இணையத்தில் பரப்பியது!
எத்தனையோ புராணங்கள் எனக்கு அறிவருளியது,
நாகூர் புராணம் தானே எனக்கு எழுத்தருளியது!
நலிந்தோருக்கு நம்பிக்கையாகவும்,
உடைந்தோருக்கு ஊன்றுகோலாகவும்,
உடனிருக்கிறது,
ஊக்கமளிக்கிறது,
உதவிபுரிகிறது!

0 Comments