வசன காவிய வல்லாளர் | நாகூர் செய்கு அப்துல் காதிர் | October 2023


பெரும் புலவர் மகாவித்துவான் நாகூர் வா. குலாம் காதிறு நாவலர் 

புலமைக்கு அதிபதியாகத் திகழ்ந்த மகாவித்துவான் பெரும் புலவர் நாகூர் வா குலாம் காதிறு நாவலர் செய்யுள் இலக்கியங்களைப் படைத்தது போன்று வசன காவியங்களையும் இவ்வகையில் வழங்கியுள்ளார். தமிழ் உரைநடை வளர்ச்சிக்குக் குலாம் காதிறு நாவலரின் பங்களிப்பு மகத்தானவை.

சீறாப்புராண வசனம்:

நாவலரின் வசன நூல்களுள் குறிப்பிடத்தக்கது சீறாப்புராண வசனம் ஆகும். உமறு புலவரைப் பின்பற்றி இந்நூலை இயற்றியுள்ளார்.

நாவலரின் மாணவர்கள் பக்கிர் முகியித்தீன், முகம்மது சுல்தான் மரைக்காயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். இந்நூலு. முகியித்தீன் ராவுத்தர் பொருளுதவி செய்திருக்கின்றனர்.

1886ஆம் ஆண்டு வெளியான இந்நூலை வெ. தவசுமுத்து நாடார் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரிபு நாயகம் வசனம்:

ஆரிபு நாயகப் புராணம் என்பது நாவலர் இயற்றிய காவியமாகும். செய்யுளில் அமைந்த இதனை வசன நடையில் எழுதியுள்ளார். ஆரிபு நாயக வசனம் என்பது இதன் பெயராகும். இந்நூலின் பாட்டுடைத் தலைவர் செய்யது அப்துல் கபீர் ரிபாயி (ரஹ்) ஆவார்.

ஆரிப் என்பது உயர்நிலை இறைஞானம் ஆகும். இதனை அடைந்த ரிபாயி அவர்கள் சுல்தானுல் ஆரிபீன் என போற்றப்படுகிறார். இந்நூலுக்கு நாவலரின் மாணவர்களும் ஏனைய அறிஞர்களும் பாராட்டுரை வழங்கியுள்ளனர்.

கன்ஜுல் கறாமாத்து:

கன்ஜுல் கறாமாத்து என்றால் 'அற்புதப் புதையல்' என்று பொருள். நாகூர் ஆண்டவரின் வாழ்க்கை வரலாற்றை அவர்தம் இறைப்பணியை நாவலர் அவர்கள் நூலாக எழுதியுள்ளார். இந்நூலின் முதல் பதிப்பு 1902ஆம் ஆண்டில் வெளியானது. சிறுசிறு தொடர்களாலும் வளமான வாக்கியங்களாலும் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

- நாகூர் செய்கு அப்துல் காதிர் 

Published in Nagore Puranam October month magazine 2023

Post a Comment

0 Comments