Nagore Puranam
நீ | கவிஞர் மீரான் தாசன் | October 2023

நீ | கவிஞர் மீரான் தாசன் | October 2023

 


துவங்கிய இக்கவியின் துவக்கம் நீ

தூதுவர் மூலம் தூது தந்தாய் நீ 

தூய்து உள்ளம் கொண்ட மெய்குரு நீ

தூணின்றி நிற்கும் வானும் நீ 

துயில் கொள்ளும் இரவும் நீ 

துலங்கும் இலங்கும் சூரியன் நீ 

துளியும் சிந்து காற்றும் நீ 

துவிரம் தேடும் மலரும் நீ 

துன்பம் இன்பம் பண்பும் நீ 

துணை இணையில்லா தூயவன் நீ

துவிதம் இல்லா ஒருவன் நீ 

துணைசெய் அருள்செய் இறைவா நீ

- கவிஞர் மீரான் தாசன் 

Published in Nagore Puranam October month magazine 2023 

Post a Comment

0 Comments