விழித்ததும்
விழித்தெழு
அன்றைய
நாளில்
உற்சாகம்
உனதாகட்டும்...
விழித்ததும்
வேலையின்
பழுவை
பட்டியல்
இடாதே...
உயர்வுக்கு
வழி கொடுக்கும்
சிந்தனைக்கு
விதைகளைத்
தூவி விடு...
மரம் செடிகள்
வேர்களை
வலுவாக்கி
வளர்ச்சியைத்
தொடுகிறது...
வலுவான
பாறைகளில்
வேர்கள்
வெற்றியைச்
செதுக்குகிறது...
விடிந்ததும்
எந்தப் பறவைகளும்
கூட்டில்
தூங்குவதில்லை...
இறகை
விரித்துப்
பறந்து
இரை தேட
தயங்குவதில்லை...
இலக்கைத்
தொடுவதற்கு
இமைகள்
திறந்ததும்
முயன்று
முன்னேறு...
ஒவ்வொரு
விடியலில்
உனக்கென
வாய்ப்பு
வாசல் வருகிறது...

0 Comments