மார்ச் 13 நுகர்வோர் உரிமை நாள்.
நுகர்வோர் யார்? நுகர்தல் என்னும் சொல் பயன்படுத்தலைப் பகரும்.
பொருள்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துவோரும் தேவையான கட்டணம் செலுத்தி சேவையைப் பெறுவோருக்கு நுகர்வோரே.
உலக மக்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ நுகர்வோரே நுகர்வோர் ஏமாற்றப்படாமல் காக்க சட்ட பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணம் முதல் முதலில் அமெரிக்காவில் எழுந்தது.
அமெரிக்காவில் (15/03/1962) இல் அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் எப் கென்னடி நுகர்வோர் 4 உரிமைகள் உடையவர்கள் என்று அறிவித்தார் ஐநா சபை (16/04/1985) இல் சில நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது தொடர்ந்து (22/02/2015) இல் கூடுதல் வழிகாட்டுதல்களையும் கூறியது.
இந்தியாவில் (24/12/1986) இல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
நுகர்வோர் இல்லையேல் உலகில் சந்தை இருக்காது சந்தையில் நுகர்வோர் ஏமாறாதிருக்க தேசிய தர நிர்ணய ஆணைய முத்திரை பதித்த பொருள்களை மட்டும் வாங்க வேண்டும் மற்ற பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும்.
விளம்பரங்களை நம்பி வாங்கும் பொருள்களைத் தவிர்த்தல் சிறந்தது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் நுகர்வோர் ஆணையங்கள் முறையாக தொடர்ந்து செயல்பட்டால் நுகர்வோர் உரிமைகள் மீறப்படாது. நடைமுறையில் இருக்கும் நுகர்வோர் பாதுகாக்கப்படுவர்.

0 Comments