காய்கறி வாங்குவதற்குக் கடைத்தெருவிற்குச் செல்ல தெருவில் இறங்கி நடந்தேன். இரு வீடுகளைக் கடந்தேன்.
மூன்றாவது வீட்டுக்காரர் புதுக்கடை தெருவில் நவீன பொருள்கள் கடை வைத்திருக்கிறார். சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்தார் அவரின் நான்கு வயது மகன் அவரின் பின்னால் ஓடி வந்தான்.
அவர் வீட்டிற்கு போ உன்னை என்னுடன் அழைத்துச் செல்ல மாட்டேன் என்று மகனை விரட்டினார். அவனும் உங்களுடன் வருவேன் என்று அடம்பிடித்தான். கடையில் உட்கார்ந்து கொண்டு தின்பண்டம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இருப்பாய் என்று சொன்னவர் தொடர்ந்து தின்பண்டம் வாங்கி கேட்க மாட்டேன் என்று சொன்னால் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்றார்.
வாங்கி கேட்பேன் வாங்கிக் கொடுக்கணும் என்றான் சிறுவன்.
காசு நீதான் கொடுக்கணும் காசு வைத்திருக்கிறாயா? என்றார் தந்தை. வைத்திருக்கிறேன் என்றான் மகன்.
எங்கே வைத்திருக்கிறாய்? தந்தையின் கேள்வி. உங்களின் சட்டை பாக்கெட்டில் என்றான் சிறுவன் .
தந்தை தன்னை மறந்து சிரித்தார்.
மகனை சைக்கிளில் ஏற்றி சென்றார்.
நான் என்னை மறந்து சிரித்தேன்.
இப்படி ஆங்காங்கே நடக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை ரசித்து சிரிக்க வேண்டும் சிரித்து விட்டு மறக்காமல் சோகம் துன்பம் நேர்கையில் நினைத்துப் பார்த்து சிரித்தால் நாமும் கவலை இல்லாத மனிதனாக களிப்போடு வாழலாம்.

0 Comments