அழுகை & அமைதி | கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ சே. அப்துல் லத்தீப் | March 2025

 


அழுகை

”நம்மை அழவும் சிரித்திடவும் 

நாயன் தானே செய்கின்றான்” 

உண்மை மொழியிது குர்ஆனில் 

உள்ளது போற்றி சிந்திப்போம்.  

(திருக்குர்ஆன்) ...

தலையில் முகத்தில் தாம்அடித்து 

தவறாய் அழுவோர் யாவரையும் 

விலையில்லாத நபிகோமான் 

விரும்பார் தம்மைச் சார்ந்தோராய்.  

(நபிகள் நாயகம்) ...

அழுதாலும் பிள்ளை அவள்தானே 

அருமையாய்ப் பெற்று எடுத்திடுவாள் 

முழுவதும் இந்தப்பொன்மொழியை  

முறையாய் உணர்ந்து வாழ்ந்திடுவோம் 

எழுவதும் உயர்வதும் நம் முயற்சி 

இதைத்தான் கடைபிடி உடன் வளர்ச்சி. 

(பழமொழி) ...


அமைதி 

அமைதி வழியைப்பரப்புங்கள்; 

அன்னமிடுங்கள் பசித்தோர்க்கு; 

உறவு முறையைக் கைக்கொள்வீர்; 

உறங்கும் வேளையில் வணங்குகங்கள்;  

இறவா சொர்க்கம் புகவதற்கு 

இதுவே எளிய வழியாகும்”. 

நிறைவாம் நன்னபி மொழியுதுவாம்  

நினைவிற் கொள்வீர் தீனோரே!  

(நபிகள் நாயகம்)

”குடும்பம் தன்னில் அமைதியதே  

குடிகொண் டிடுதல் நலமாகும்” 

என்பது காந்தி பொன்மொழியாம் 

என்றும் போற்றி வாழ்ந்துடுவோம். 

(மகாத்மா காந்திஜி)

- கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ சே. அப்துல் லத்தீப்

Published in Nagore Puranam March month magazine 2025

Post a Comment

0 Comments