படகில் வந்தவரே! - மக்கள் கவிஞர் இன்குலாப்

 


மக்கள் கவிஞர் இன்குலாப் :

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் எஸ்.கே.சாகுல் ஹமீது என்ற இயற்பெயருடன் பிறந்தார்; கீழக்கரையில் பள்ளிப் படிப்பையும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும், மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை (தமிழ்) பட்டத்தையும் முடித்தார்; புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், சமூக ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமைகள் குறித்துத் தனது கவிதைகள், நாடகங்கள் மூலம் குரல் கொடுத்தார்; எளிய மக்களின் வாழ்வையும் போராட்டங்களையும் பதிவு செய்த இவரது "வேள்விகள் தொடங்கட்டும்", "மனுசங்கடா", "குடிசை", "வெள்ளை இருட்டு" போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை; பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு சமூக நீதிக்காகக் குரல் கொடுத்த இவரை "மக்கள் கவிஞர்" என்று போற்றுகின்றனர்; இத்தகைய சிறப்புமிக்க இன்குலாப் அவர்கள் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி காலமானார்.

படகில் வந்தவரே!  

பவுர்ணமி இரவில் படகில் வந்தவரே! நதியலை மோதும் நாணல் புதரின் மறைவில், வெண்மணல் விரிப்பில் நான் இருக்கிறேன். தண்ணீரில் உறங்கும் தாமரையின் கனவுகளாய் அல்லிகள் விழிக்கும் தடாகத்தின் அருகில் நான் இருக்கிறேன்.

தங்கள் இதழ்களின் தீண்டுதலை நான் எதிர்பார்த்திருந்தேன். உயிரின் ராகங்கள் என் உதடுகளில் உருகின! புல்லாங்குழல் இசையில் நான் புல்லரித்துப் போனேன். வானத்தின் மீன்கள் மேகமுந்தானையில் சோர்ந்து தங்கள் கீதலயங்களில் கிறங்கிக் கிடந்தன. இரவின் கனவுகள் ஓய்ந்து போகும். அதிகாலையில் உங்கள் கானம் நின்றது!

பவுர்ணமி இரவில் வந்த படகுக் காரரே! நதிநுரையில் நாணல் புதர்களை விலக்கிச் செல்லும் போது மெதுவாகச் செல்லுங்கள்! வழியில் தண்ணீர் வாத்துகளின் அடைகாத்த முட்டைகள் கிடக்கலாம் கால்கள் மோதிவிடாதிருக்கட்டும் என்று இன்குலாப் குறிப்பிடுகிறார்.

Post a Comment

0 Comments