Nagore Puranam
பேசாக் காதல் (தொடர் - 06) | Vol.4, Issue 6 - JUNE 2026 | ம. முஹம்மது உஸ்மான்

பேசாக் காதல் (தொடர் - 06) | Vol.4, Issue 6 - JUNE 2026 | ம. முஹம்மது உஸ்மான்


கேன்டீனில்...

ரேணுகிட்ட என்ன பேசிகிட்டு இருந்த எனக் கேட்டான் ரவி. பஸ் ஸ்டேண்டுல ஒரு பொண்ண பாத்த மச்சா, செம்ம அழகுடா அவ... போதும் போதும். மேட்டர் என்ன சொல்லு... இல்ல கனவுலயும் கூட வந்தா.! நம்ம காலேஜ் தான். அதுதான் ரேணு கிட்ட சொல்லி வச்ச...

சீனியர்ஸ்-கு அடுத்த மாசம் ஃபேர்வல் பார்டி இருக்கு, டிபார்ட்மெண்ட் பொண்ணுகளும் வருவாங்க கண்டுபிடிச்சிருலாம் என்றான் மாறன்.

பேசிக் கொண்டிருக்கும்போதே மாறனை இடித்தான் ஒருவன். டேய் ஓரமா நின்னு பேசுங்கடா.. ப்ரோ இடிச்சது நீ. டேய் தம்பி, நாங்க சீனியர் என்று பேச்சு வார்த்தையில் இருந்து அடிதடிக்கு மாறியது.

அவர்களில் ஒருவனை ஆனந்த் சரமாரியாக தாக்கினான். இது டிபார்ட்மண்ட். சண்டையாக மாற, விஷயம் பெரியதாகி ஆனந்தையும் அவன் நண்பர்களையும் அழைத்து பிரின்ஸ்பள் வார்னிங் கொடுத்து அனுப்பினார்.

கல்லூரியின் முதல் ஆண்டிலே ஆனந்திற்கு பல புதிய அறிமுகங்கள் கிடைத்தது..

ஆடல் பாடல்களுடன் விடைபெறும் மாணவர்களுக்கான ஃபேர்வல் டே வந்தது. கேன்டீனில் நடந்த சண்டைப் பற்றி ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர். ஆனந்தைத் தேடி ரேணு வந்தாள்.

ஆனந்த் அவ ஐடி டிபார்ட்மெண்ட் டா, நேம் ஜெனிஃபர். அவள் எங்கிருக்கிறாள் என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்து பறந்து விட்டான்.

ஐடி டிபார்ட்மெண்ட் ஸ்டால் அருகே.. எதிர்பாராத மோதல், அந்த இடம் பையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. அது ஜெனிஃபர் தான்.! பளார் என சத்தம்...

தொடரும்....

Post a Comment

0 Comments