வாரிசுக்குச் சிபாரிசு | November 2025 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்

 


ஆசிரியர் காசிநாதன் மாணவர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்,பெற்றோரின் போற்றுதலையும் பெற்ற பொற்புடையவர் .

ஒரு நாள் அஞ்சலகம் சென்று சேமிப்பு விவரங்களைக் கேட்டார்,நல்ல நாள் பார்த்து வருவதாக விடை பெற்றார்,

அடுத்த புதன் கிழமை வந்தார், அஞ்சலக தலைவர் தயாளனையே விண்ணப்பங்கள பூர்த்தி செய்ய வேண்டினார், ஒவ்வொன்றாக கேட்டு விண்ணப்பத்தில் எழுதிய தயாளன் இறுதியில் வாரிசாக யாரை நியமிக்கிறீர்கள் ? என்று கேட்டார்,

ஏன் வாரிசு நியமிக்க வேண்டும்? ஆசிரியரின் கேள்வி.

ஏதேனும் ஆகிவிட்டால் கணக்கில் உள்ள பணத்தை வாரிசுதாரர் எளிதாக பெறும் வாய்ப்பே வாரிசு நியமனம்,

நீங்கள் நம்பிக்கைக்குரிய நற்பேறு பெற்றவர் என்று உங்களை எழுத சொன்னால் அபசகுனமாக ஆரம்பிக்கும் பொழுதே ஏதாவது ஆகிவிட்டால் என்று சொல்கிறீர்களே என்று கோபம் கொப்புளிக்க கொதிக்கும் சொற்களைக் கொட்டிவிட்டு வெளியேறினார் ஆசிரியர்,

சில நாட்கள் கழித்து ஆசிரியர் காசிநாதன் வீட்டிற்குச் சென்று இயல்பாக அளவளாவிய தயாளன் சேமிப்புக் கணக்கில் வாரிசு நியமனம் குறித்து விளக்கி அதன் பயனையும் நயமாக கூறினார்.

மறுநாள் அஞ்சலகம் வந்து கணக்கு துவக்கினார் ஆசிரியர்,அதோடு நிறுத்தவில்லை ,அந்த ஊரில் ஆசிரியருக்கு அபார மதிப்பு, ஊரில் அனைவரையும் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு துவக்க வைத்து வாரிசு நியமனமும் செய்து கொடுத்தார் ஆசிரியர் காசிநாதன்.

-  கவிஞர் மு.அ. அபுல் அமீன்

Published in Nagore Puranam November month magazine 2025

Post a Comment

0 Comments