அதே மயங்கிய நிலையில், எப்படியோ பாதை மாறாமல் தன் வீடு சென்று அடைந்தான்.
வயசு கோளாறு இல்லையா அதான்..
பையை வீசி எறிந்து சந்தோஷத்தில் குதித்துக் கொண்டே நுழைந்தான். அம்மா கிட்சனில் இருந்து கத்திக்கிட்டே வந்து, அவன் தலையிலே ஒரே அடி!
போ! போய் பேக்கை ஓரம் வெச்சிட்டு, கை கால் முகம் கழுவிட்டு வா போ... சிரித்தபடியே அம்மாவின் கன்னத்தைக் கிள்ளி சென்றான்..
படிக்கலயாடா... நாளைக்கு லீவு தா மா.. என்றான்
அடுத்து சனி, ஞாயிறு தான், அதனால் படிக்காமல் போனில் லவ் ரீல்ஸ்க்கு லைக் போட்டு சிரித்துக் கொண்டிருந்தான் ஆனந்த்.
காலையில் சீக்கிரமாக எழுந்து விட்டான். எப்போமே சீக்ரமா குளிச்சிட்டு வர்ரவன் லேட்டாக வந்தான். இரு முறை குளித்தான் போல...
நல்லா ட்ரெஸ் போட்டு ஹீரோ மாதிரி ரெடி ஆகி கண்ணாடிய பாக்குறதும் சிரிக்குறதுமாக இருந்தான்... லீவுன்னு சொல்லிட்டு பயபுள்ள எதுக்கு ரெடி ஆகுதுன்னு தெரியலயே... என அம்மாகாரியும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அம்மா பிரெண்ட பாக்க போறேன்னு வெளியில் கூட கால் வைக்க வில்லை, அம்மா கையை பிடித்து, டேய் போரதும் போர கடைக்குப் போய் பொருள் மட்டும் வாங்கி குடுத்துட்டு போடா..
மா .. என்னமா ... நா போமா.
டேய் டேய் இது மட்டும் டா. வேல அதிகமாக இருக்கு டா . சரி இரு போர. என சொல்லி அவசர அவசரமாக வாங்கி கொடுத்துட்டு சென்றான்..
- ம. முஹம்மது உஸ்மான்
Published in Nagore Puranam November month magazine 2025

0 Comments