மகுடம் சூடா மன்னர் | கவிஞர் தி. சுப்ரமணியன் | February 2026

 


கண்ணில் உள்ளது கருணை 

அதை கவியாய் சொன்னால் பெருமை. 


உன் உள்ளம் தான் இனி என் உடமை - அதை. 

ஊரார்க்கு உரைப்பதிலே தான் எனக்கு உவகை.


ஆசை மனம் இங்கு அலையுதுப்பா 

கடல்அலை போல். அண்டி வந்தேன் 

ஆதரிப்பாய் அடைக்கலமாய் தேடி நின்றேன்


மாசு மறுவற்ற வதனம் 

மயக்க வைக்குது

மன்றாட வைக்குது 

தினம் மழலையின் சொல் கேட்கும் 

தாயாக மயங்கி நிற்கிறேன் மலை போல


மாறாத பாசம் மலர்களால் 

அபிஷேகம் மலக்குகளும் மயங்கிவிடும் 

பார்வை என் மனதை மயக்கும் பூஞ்சோலை 

மனதை வைத்தேன் மலர் பாதத்தில்.


மகுடம் சூடா மன்னவனாம். 

மக்கமா நபியின் பேரனாம் நான் - அவர்

மலர் அடிபணிகின்ற சேயனாம்.


கவிஞர் தி. சுப்ரமணியன்

Published in Nagore Puranam February month magazine 2026

Post a Comment

0 Comments