உன் பொன்மொழிகளால்

எங்கள் இலட்ச்சியம் பிறந்தது..


கடைக்கோடி தமிழனாய் 

இந்தியாவை உலக அரங்கில் 

தலை நிமிர்தினாய்...


விண்ணகத்திலும் 

உன் கொடி பறக்கின்றது

கொல்களும் உன்னை துதிக்கின்றன...


கண்கள் மூடி காண்பது கனவல்ல 

இமைகளை தூங்கவிடாமலிருப்பதே

இலட்ச்சிய கனவு என்றாய்...


எங்கள் இமைகள் இமைக்கும் 

நேரத்தில் சென்றாய்,

 இந்தியாவின் பொருட்பினை 

எங்களிடம் விட்டு சென்றாய்...


மரங்கள் கொண்டு 

தேசத்தை வளர்த்திட 

மாணவ சக்தி கொண்டாய்....


உன் கனவின் பாதையில் 

கண் விழித்து செல்லும் 

உன் அன்பு மாணாக்கர்கள்...


கவிஞர் தமிழ் காதலன் 

Published in Nagore Puranam February month magazine 2026