பல்லாண்டு செய்த நற்பலன்கள் தீய சொல்லொன்று அழித்திடலாம்.

பல்லாண்டு செய்த தவப்பலனை ஒரு சொல்லொன்று கொடுத்திடலாம்.

பணம் பதவி பெருமை ஆணவத்தில் வரும் சொற்கள்.

பளபளக்கும் கண்ணாடி இதயங்களை உடைக்கும் கடினக்கற்கள்.

கவலை துக்கம் வறுமை விரக்தி கொண்ட மனதைக் கிழிக்கும் முட்கள்.

மண்பட்ட உணவுகளை மனிதர்கள் பலரும் எடுப்பதில்லை.

பண்பட்டவர்கள் எவரும் பிறர் மனம் புண்பட நடப்பதில்லை.

அன்பும் கருணையும் ஆதரவும் மிகுந்த நல்லோர்களின் ஒரு சொல்லும்.

நறுமணம் கமழும் சுவனத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்.

- கவிஞர் மீரான்தாசன் 

Published in Nagore Puranam May  month magazine 2024