பார்டர் மதுக்கடைகளின் ஷட்டர்களை
அணைத்தபடி உறங்கும்
ஒட்டுத்திண்ணைவாசி
துண்டுபீடி
எச்சில் சோறு
ஓசி குடி
எல்லாம் இன்பமயம் இவன் வசம்
கையில் வேப்பிலைக் கொத்தும்
கொப்பரைச் சட்டியுமாக
திடீர் புடீரென அவதாரமெடுப்பான்
செடில் கால் ஊன்றியபின்
கால்கள் பார்டர் தாண்டுவதில்லை
கோயில் தாழ்வாரம் உறங்கும் தலம்
பிரசாதமே பிரதான ஆகாரம்
ரோஸ் பவுடர் குங்குமத் திலகம்
ஜிகினா உடைகள்
குழந்தைகள் அழவும் சிரிக்கவும்
ஆகாயத்தில் சுற்றிவந்து
இறங்கும் தேவதூதர்
காப்பு அவிழ்த்தாயிற்று
தலைகீழாக எழுதப்பட்ட
சாராயக்கடை பதாகை
நேராகத் தெரிகிறது
வாழ்வோ அவனைச் சுழற்றுகிறது
ஒரே சமயத்தில்
கடவுளாகவும்
காத்தவராயனாகவும் !

0 Comments