புலனம் என்னும் நகரத்தில்தான் 

புலம்பி கொண்டிருக்கிறார்கள்

 மனிதர்கள் படவரி என்னும் பருவத்தில்தான் 

இன்பம் கொள்கிறார்கள் 

இளைஞர்கள் முகநூல் என்னும் பூங்காவில்தான் - சிலர் 

நடைபயிற்சிச் செய்கிறார்கள் இப்போதெல்லாம்...

செயலிகள் வந்தது விதவிதமாய் - நம்

செயல்கள் குறைந்தன மெதுமெதுவாய்

தரையில் விளையாடிய காலம்போய்

தொடுதிரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது...

திறன்பேசி வந்த கொஞ்சகாலத்தில் 

வாய் பேசாமல் போனது பல பேருக்கு

அறிவும் ஆனந்தமும் பொங்கிவழியும்

அளவோடு பயன்படுத்தினால் நம்தேவைக்கு 

அன்போடு பேசும் மனிதர்களில் சிலர்

அடிமையாகிவிட்டனர் கைபேசிக்கு

தொலைபேசி என்னும் உலகத்தில்

தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்; பத்திரம்.

- இ. முகில் வேந்தன்