Nagore Puranam
கல்வி மற்றும் வாழ்வியலில் ஆசிரியர்களின் பங்கு | மு. முஹம்மது சுஹைப் | September 2024

கல்வி மற்றும் வாழ்வியலில் ஆசிரியர்களின் பங்கு | மு. முஹம்மது சுஹைப் | September 2024

 


நம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பேசப்படும் கூற்றுகளில் ஒன்று மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பழமொழ. தாய் தந்தையரை விட நம்மை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது.

மூன்றரை வயது நிறைந்த ஒரு குழந்தை பள்ளி சேர்ந்த நாள் முதல் படிப்பை முடித்து வெளியேறும் வரை ஆசிரியரின் அறிவுறுத்தலே அவன் வாழ்வினை மேம்படச் செய்யும்.

நால்வர் மத்தியில் நமக்கு மதிப்பையும் செருக்கையும் கூட்டித் தருவது இந்த கல்வியே. நாம் இந்த கல்வியை எவ்வாறு மதிக்கின்றோமோ அதனை விட நமக்கு அதனை கற்பித்தவர்களை மனதார போற்ற வேண்டும்.

எனக்கு முந்தைய தலைமுறை செல்லும் போது அவர்கள் படிப்பதில் கவனக்குறைவு ஏற்பட்டால் ஆசிரியர் அவர்களை அடித்து படிக்க வைப்பார்கள். இதனை வீட்டில் சொன்னால் வீட்டில் இருப்பவர்களும் இரண்டு அடியை சேர்த்து கொடுப்பார்கள்.

என்னுடைய தலைமுறையில் படிப்பதில் கவனக் குறைவு ஏற்பட்டால் ஆசிரியர்கள் அடிப்பார்கள். இதனை வீட்டில் சொன்னால் நாங்கள் இதில் தலையிட முடியாது. அடியாத மாடு படியாது என்பார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறையினரோ கவனக் குறைவாக படித்த மாணவனை ஆசிரியர் அடித்தால் போதும் தன் வீட்டில் சொல்லி அதனைப் அமர்க்களம் படுத்தி பள்ளியில் சண்டையும் கூச்சலும் இடுகின்றனர் மாணாகர்களும் அவர்களது பெற்றோர்களும்.

மற்றொரு புறம் சரியாக படிக்கவில்லை என்று அடித்து திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் மாணாகர்களும் பலர் இன்று என்ற செய்திகளையும் நாளிதழில் தினந்தோறும் படித்து வருகிறோம்.

பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மட்டும் நமக்கு ஆசிரியரல்ல நாம் அறியாத எந்த ஒன்றையும் நமக்கு அறிவிப்பவரும் பயிற்றுவிப்பவரும் நமக்கு ஆசிரியரே.

சிற்பி தன் உளியால் கல்லை சிறுக சிறுக அடித்து சிலையை வடிவமைப்பான். சிற்பியின் நோக்கம் கல்லை வதைப்பதல்ல. சிற்பியின் கல்லில் அடிப்படாத எந்தவொரு கல்லும் அழகிய சிலையாக முடியாது அதுபோல் மாணாகர்களை பண்படச் செய்வதற்காகவே ஆசிரியர்கள் சிற்பி போல் செதுகின்றனர்.

மேலும் மாணாகர்களின் வாழ்வியலை செதுக்குவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது.

- மு. முஹம்மது சுஹைப் 

Post a Comment

0 Comments