அந்த ஊர் மழையைப் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. வறட்சி தாண்டவமாடியது. வறுமையின் காரணமாக அருகாமையில் இருந்த காட்டிலிருந்து மரங்களை வெட்டி விற்க ஆரம்பித்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி மழை பெய்யாததற்கு காரணம் என்னவென்று விவாதித்தனர். கடைசியில் மரம் வெட்டி காடுகளை அழிப்பதால் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மழை பொய்த்துப் போனது. எனவே யாரும் இனி மரம் வெட்டக் கூடாது என்றும் மீறி வெட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஊர் முழுவதும் இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாரும் இனிமேல் மரத்தை வெட்டக் கூடாது மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தண்டோரா போடப்பட்டது. தயாளனுக்கு மரம் வெட்டுவதைத் தவிர வேறு தொழில் தெரியாது. ஆகவே அவ்வப்போது இரவில் காட்டுப் பகுதிக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மரம் வெட்டி வியாபாரம் செய்து வந்தான். இதை மோப்பம் பிடித்த வனக்காவலர்கள் தயாளனை நோட்டம் விட ஆரம்பித்தனர்.
ஒரு நாள் அதிகாலை தயாளன் மரம் வெட்டி அதை தலையில் சுமந்து விற்கச் சென்ற போது அவனை மடக்கிப் பிடித்து மிரட்டி, இனிமேல் மரம் வெட்டக் கூடாது என்று கண்டிப்பாக கூறி அவனிடமிருந்த பணம் மற்றும் கோடாரியைப் பிடுங்கிக் கொண்டு அவனை அனுப்பினார்கள்
நாட்கள் கடந்தன. மறுபடி தயாளின் மறைமுகமாக மரம் வெட்ட ஆரம்பித்து வனக்காவலரிடம் மாட்டிக்கொண்டான். உடனே வனக்காவலர்கள் அவன் மேல் புகார் எழுதி நீதிபதியிடம் அழைத்து சென்றனர். அவனைப் பார்த்த நீதிபதி என்ன இவர்கள் சொல்வது உண்மையா என்று நதிபதி கேட்டார். ஆமாம் ஐயா என்றான் தயாளன்.. வனத்துறையினர் எச்சரித்தும் நீ மரம் வெட்டியது குற்றம் எனவே உனக்கு தகுந்த தண்டனை வழங்குகிறேன் என்றார் நீதிபதி.
தயாளன் அமைதியாக, ஐயா! நான் மரம் வெட்டியது உண்மைதான். தவிர்க்க முடியாத காரணங்களால் மரம் வெட்டலாம் ஆனால் அதற்கு முன் இரண்டு மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது தான் ஊர் கட்டளை. எனது வாழ்வாதாரத்திற்கு மரம் வெட்டுவதைத் தவிர வேறு வழி எனக்கு எதுவும் தெரியவில்லை என்னை மன்னிச்சிடுங்க. ஆனா நான் ஒவ்வொரு தடவை மரம் வெட்டும் முன்பு ஐந்து மரக்கன்றுகளை நட்ட பிறகுதான் மரத்தை வெட்டுவேன். அதுதான் எனது வழக்கம் என்றான்.
அதைக்கேட்ட நீதிபதி காவலரைப் பாரத்து இவன் சொல்வது உண்மையா என்று கேட்டார். அவர்கள் தலை சொறிந்துகொண்டு ஆமாம் ஐயா! அவன் சொன்னது அனைத்தும் உண்மைதான். அவன் மரம் வெட்டிய இடங்களில் சிற சிறு மரங்கள் வளர்ந்து வருவதைப் பார்த்துள்ளோம் என்றனர்.
உடனே அவர்களைப் பார்த்து அவன் சரியாகத்தான் செய்துள்ளான். இரண்டு மரக்கன்றுகளுக்கு பதில் ஐந்து மரக்கன்றுகள் நட்டுள்ளான். அவனைப் பாராட்டிதான் ஆகவேண்டும். ஆனால் எதையும் ஆராயாமல் பிறர் மீது வீண் பழி சுமத்தியது தான் நீங்கள் செய்த குற்றம். தவறு செய்தது நீங்கள் தான். எனவே உங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன் எனறு தீர்ப்பு கூறினார்.
எதையும் ஆராய்ந்து அறியாது முடிவெடுப்பது எப்போதும் தவறாகவே முடியும்.
இஸ்லாத்தில் மரம் நடுவது ஒரு சிறந்த தர்மமாகவும் (சதகா-இ-ஜாரியா), சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நற்செயலாகவும் கருதப்படுகிறது.
மரம் நட்டு, அதில் மனிதர்களோ, பறவைகளோ அல்லது விலங்குகளோ உண்பதை நட்டவருக்கு பாக்கியம் கிடைக்கும் என்றும், நாளை இறுதி நாள் என்றாலும் மரக்கன்றை நடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) வலியுறுத்தியுள்ளதாகவும் குர்ஆன், ஹதீஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கிய அம்சங்கள்:
நிலையான தர்மம்: மரம் நட்டு அதிலிருந்து கிடைக்கம் கனிகள், நிழலை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்களோ, அது மரம் நட்டவருக்கு நிலையான தர்மமாக அமையும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தேவையற்ற முறையில் மரங்களை வெட்டக்கூடாது, அவை கருணையின் அடையாளம்.
நபிவழி: மரம் நடுதல் என்பது நபி (ஸல்) அவர்களின் முக்கிய அறிவுரையாகும். ஒரு மரத்தை நடுவதன் மூலம், அதன் விளைச்சலை யார் உண்டாலும், அது அந்த நபருக்குக் கூலியாக எழுதப்படும்.
மரம் போன்ற விசுவாசி: நல்ல விசுவாசி, கனி தரும் மரத்திற்கு ஒப்பிடப்படுகிறார். அது எப்போதும் பலன் தரும்.
எனவே, இஸ்லாத்தில் மரம் நடுவது என்பது இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் என்பதனால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எல்லோரும் மரங்களை பாதுகாப்போம்! இடைவிடா மழை பெருவோம்!
பூமிக்கு அழகு சேர்ப்பதுடன், ஒரு சிறந்த தொண்டாக வளர்ப்போம்.
இயற்கையைப் பாதுகாப்போம் ! இடைவிடா மழை பெருவோம் !
- பாவலர் அல்போன்ஸ் மோசஸ்

0 Comments