Nagore Puranam
தாயே ! | கவிஞர் ஜான் பீட்டர் | April 2026

தாயே ! | கவிஞர் ஜான் பீட்டர் | April 2026



ஓடி ஓடி உழைத்த தாயே 

ஓய்வின்றி வளர்த்த தாயே 

அறிவுச் சுடரை ஏற்றிய தாயே 

அத்திப்பழம் சுவைத்திடுமா 

தாயின் முகம் மறந்திடுமா.

உன்னைக் கொஞ்சி விளையாடிய தாய்க்கு 

மாற்றுவரிடம் கெஞ்சி கேட்க விடாதீர்கள் 

பாலும் சோறும் ஊட்டிய கைகளுக்கு 

பட்டினி கிடக்க விடாதீர்கள்.

நீர் இருக்கும் வரை தான் புல்லுக்கு வளர்ச்சி 

நீர் இருக்கும் வரை தான் மீனுக்கு மகிழ்ச்சி 

தாய் இருக்கு வரை தான் குடும்பத்துக்கு எழுச்சி.

வெற்றிலை வாடுகின்றதையா

பெத்த மனம் தேடுதையா 

கண் முழிச்சி வேலை செஞ்சி

மகனா வளத்துட்டா 

இந்தத் தாய்க்கு கஞ்சி ஊத்த மகனுக்கு நாதியில்ல 

பச்சோந்தி போல இருக்காதே.

பெற்றவளைப் பார்த்துக்கொள் நன்மை கிடைக்கும் 

தாரம் வந்ததால் தாயை வெறுக்கின்றாயா 

மாறுகின்ற உலகத்திலே தாயே சிறந்த கோவிலடா 

அதைத் தெரிஞ்சு நடந்திடு

நன்மை கிடைக்கும்.

- கவிஞர் ஜான் பீட்டர்

Post a Comment

0 Comments