1. கண்களால் விதைத்த விதை

கண்களால் போட்ட விதை…

கவிதை…

பூக்களாய் மலர்கிறது

என் நினைவில்…

2. மீண்டும் பிறந்தேன்

ஒருநாள் நீ மயங்கி கீழே சரிந்தாய்…

சரிந்தது நீ அல்ல,

சில நிமிடம் சரிந்தது என் உயிர்தான்…

நீ கண்விழித்த பொழுது,

மீண்டும் பிறந்தேன் நான்…

3. அறுவடை

ஆயிரம் கவிதை என்னுள்,

அறுவடை செய்கிறேன் உன்னுள்…

நிலவின் ஒளியால்…

4. என் மனைவி — ஒளி

கரடு முரடான வாழ்க்கைப் பாதையைக்

கடந்து செல்ல உதவும் நிலா…

என் மனைவி — ஒளி.

5. நீ வராத நாள்

ஒருநாள் நீ வரவில்லை என்றால்,

இருளாவது உலகம் மட்டும் இல்லை…

என் வாழ்வும் தான், நிலா!