உலக அஞ்சல் நாள் | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | October 2023

உலக அஞ்சல் நாள் அக்டோபர் ஒன்பதாம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அஞ்சல் துறை 01/10/1854 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறை ஒரு நாளில் மட்டும் இரண்டு லட்சம் கடிதங்களில் பட்டுவாடா செய்கிறது.

இந்திய அஞ்சல் துறையில் 1,54,000 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இந்திய அஞ்சல் துறை அதிக அளவு அஞ்சலகங்கள் உள்ள உலகின் மிகப்பெரிய துறை. 57 ஆயிரம் அஞ்சலகங்கள் உள்ள சீனா உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் ஆறு லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். வங்கிப் பணியாற்றும் அஞ்சலகங்கள் கிராமங்களில் மக்கள் சேமிக்க சிறந்த சேவை செய்கின்றன.

6 ஆயிரம் மக்களுக்கு ஒரு அஞ்சலகம் என்ற கணக்கில் தமிழ்நாட்டில் 10 லட்சத்து 263 அஞ்சலகங்கள் உள்ளன. அண்மை காலமாக தமிழ்நாட்டில் சிறிய ஊர்களின் ஒரு நபர் பணிபுரியும் அஞ்சலகங்களில் தமிழ் அறவே அறியாத வட இந்தியர்களை நியமித்து தமிழ் மட்டுமே பேசும் கிராமப்புற பாமர மக்கள் அஞ்சலகத்தை அணுக முடியாது அநியாயம் செய்வதை தமிழக அஞ்சல் துறை அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam October month magazine 2023 

Post a Comment

0 Comments