நூறு கோடி விந்தணுவில் முந்தி சென்று அடைந்த வெற்றியை மறக்காதே!
அடைகாக்கப்பட்ட பத்து திங்களே போதும் விடை கொடுத்து வீறுகொண்டெழு மனமே !!
விலா எலும்பை விரித்து பிறந்த உனக்கு விமர்சனங்கள் ஒரு தடையா?
வீழ்ச்சி பெற்ற காலம் மறந்து -உலகை வென்று வீறு கொண்டெழு மனமே !!
பிறப்பிலேயே வெற்றி கண்ட உனக்கு நடப்பினில் ஏனோ தயக்கம்?
இறப்பினில் ஏதுமில்லை, இங்கு வெற்றி, இயலாமையை கொன்று வீறு கொண்டெழு மனமே !!
விண்ணில் பாயும் ஏவுகணையை பார் ஏவியது யார்?
உன்போல் ஒருவன் என்பதை மறக்காதே, வியப்பில் சுயநிலையை இழக்காதே,
உன்னால் முடியும் வீறு கொண்டெழு மனமே!!
நீதி வழங்குகையில் கலீபா உமராய் இரு, கவி பாடுகையில் கம்பனாய் இரு,
எழும் போது விருட்சமாய் எழு,
ஏர்முனையில் விவசாயியாய் இரு,
போர்முனையில் வீரனாய் இரு,
வாள் உரையில் இருக்கையில், கூர்மை தெரியாது,
உள்ளங்கைக்கு வந்துவிட்டால் தோல்வி அறியாது,
விழும் போது விதையென விழு,
உறங்கியது போதும் ! வீறுகொண்டெழு மனமே !! வெற்றி நிச்சயம்!!!

0 Comments