எனக்குள்ளே தேடு | கவிஞர் மீரான்தாசன் | December 2023

வசிப்பதற்கான சூழலை மனிதன் பூமிக்கு வெளியில் தேடுகின்றான். பூமி சொல்லுது எனக்குள்ளே தேடு !

பொருளாதாரத்தை நாட்டுக்கு வெளியே தேடுகின்றான். தாய்நாடு சொல்லுது எனக்குள்ளே தேடு !

அன்பையும் அரவணைப்பையும் வீட்டிற்கு வெளியே தேடுகின்றான். வீடு சொல்லுது எனக்குள்ளே தேடு !

பண்பாடு கலாச்சாரத்தை மாநிலத்தின் வெளியே தேடுகின்றான். தமிழ்நாடு (மாநிலம்)சொல்லுது எனக்குள்ளே தேடு !

அழகிய நினைவுகளையும் மக்களையும் ஊருக்கு வெளியே தேடுகின்றான். ஊர் உரைத்தது எனக்குள்ளே தேடு !

இறைவனை மனிதன் தனக்கு வெளியே மட்டும் தேடுகின்றான். இறைவன் சொல்கிறான் உனக்கு உள்ளேயும் தேடு !

- கவிஞர் மீரான் தாசன் 

Published in Nagore Puranam December month magazine 2023

Post a Comment

0 Comments