மகப்பேறு மருத்துவத்தில்
மகத்தான முன்னேற்றம்
சுகமான சுகப்பிரசவம்
சுவடின்றி போவதேன்
இலட்சம் கொடுத்து படித்து
இலட்சம் சம்பாதிக்கும்
இலட்சியம் நிறைவேற
நிச்சயம் சிசேரியன்
எங்கும் மருத்துவமனை
ஏழடுக்கு மாளிகை
தங்கும் அறைகளில்
பொங்கும் வசதிகள்
எண்ணி சேர்த்த
ஏழைகளும் காசைத்
தண்ணீரில் கரைத்தாற்போல்
தாராளமாய்க் கொட்ட வேண்டும்

0 Comments