சாதி இல்லை என வாதி | கவிஞர் மீரான்தாசன் | November 2023



ஆதியில் இல்லை இந்தக் கொடியச் சாதி புதிதாக தோன்றியது மேல் கீழ்ச் சாதி

மதியில்லா மாந்தர்கள் வகுத்த விதி மதிகெட்டு பிரித்து வைத்தான் பலவீதி

உறுதியோடு உன் கருத்தை இங்கு பதி உண்மையில் மக்களைப் பிரிக்கும் ஒரு சதி

மனிதனின் உணர்வுகளை சிறிதேனும் மதி வேற்றுமைகளையும் உன் காலடியில் போட்டு மிதி

இருள் போக்க வந்த ஞான சூரியனே உதி குலம் கேட்டு ஒளி தரவில்லை வான்மதி

பாகுபாடு பார்க்கவில்லை ஓடும் நதி ஒற்றுமை என்னும் சமுத்திரத்தில் குதி

இங்கு மதியிழந்து ஏற்பவர்கள் மிகுதி இது சமூகத்தில் கேட்க நாதியற்ற பகுதி

சீர்திருத்தம் கொண்டுவர முயன்றார்கள் பல சமூகவாதி இனிவரும்‌ தலைமுறைக்கு இது வேண்டாமென போதி

ஓதி வேதத்தில் உண்டு என்பான் சாதி சொல்லமாட்டான் பாதி            அதிவிரைவில் கிடைக்கும் நல்ல செய்தி ஒரு நாள் உண்டு நமக்கு நீதி

- கவிஞர் மீரான்தாசன்

Published in Nagore Puranam November month magazine 2023


Post a Comment

0 Comments