இறை வாழ்த்து - உமறுப்புலவர்

சீறாப்புராணம் :

சீறாப்புராணம் என்பது 17ஆம் நூற்றாண்டில் உமறுப் புலவர் என்னும் இசுலாமியத் தமிழ்ப் புலவரால் எழுதப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் தமிழ் இலக்கியமாகும். வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பட்ட இந்நூல், தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் ஒரு முக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது.

 "சீறத்" என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவமான "சீறா" வாழ்க்கை வரலாற்றையும், "புராணம்" பழமையான வரலாற்றையும் குறிப்பதால், சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் பழைய வரலாற்றைக் கூறும் நூலாகும்.

 விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்ட இந்நூலுக்கு கா. ப. செய்குதம்பிப் பாவலர் உரை எழுதியுள்ளார். 

சீறாப்புராணம் தமிழ் முஸ்லிம்களிடையே மிகுந்த மதிப்பைப் பெற்று மசூதிகள் மற்றும் மதக் கூட்டங்களில் வாசிக்கப்படுவதோடு, தமிழ் இலக்கிய வட்டாரங்களிலும் ஒரு சிறந்த காப்பியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(பாடல் 1 விளக்கம்)

உலகில் உள்ள செல்வங்களுக்கொல்லாம் செல்வமானவன்.. பரந்த இப்புவியில் உள்ள பொருள்களில் எல்லாம் மெய்ப்பொருளாகத் திகழ்பவன். ஆராய்ந்து அறியும் அறிவுக்குகெல்லாம் அப்பாற்பட்ட தெளிந்த அறிவொளியாகத் திகழ்பவன். அவன் முக்காலத்தையும் கடந்த மெய்ப்பொருளாக இருக்கிறான். இறைவன் அணுவுக்கு அணுவாகவும் அண்ட பிரமாண்டமாகத் திகழ்பவன். அளவிடமுடியாத பேரொளிக்கெல்லாம் பேரொளியாகத் விளங்குபவன். பரந்து விரிந்த இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவ்வுயிரினங்களில் கருவுக்குக் கருவாக விளங்குபவன். இவ்வுலகில் நிறைந்துள்ள எல்லா உயிரினங்களையும் படைத்து, காத்து, இரட்சித்துக் கொண்டிருப்பவன் இத்தகைய மேலான இறைவனை அடைவதுதான் எனது இலக்காகும் என்று உமறுப்புலவர் பாடுகிறார்.

(பாடல் - 2 விளக்கம்)

சிறந்த மெய்ப்பொருளான இறைவன் அழிவில்லாதவன் தெரிந்து, இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம், எனும் முக்காலத்தையும் உணர்ந்தவன். ஆசையைத் துறந்தவர்களின் இதயத்துள் உறைந்திருப்பவன். இன்பம், துன்பம் அற்றவன். இவ்வுலகத்தில் பிறந்த பல்வகையான உயிர்களின் அகத்தில் உறைந்திருப்பவன். பிறப்பு, இறப்பு இல்லாத இத்தகைய இறைவனை மறந்தவர்கள் மண்ணில் மதி மறந்தவரே என உமறுப்புலவர் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

0 Comments