Nagore Puranam
தாயைப் போற்று | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | December 2023

தாயைப் போற்று | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | December 2023

 


பாலூட்டி பாசம் காட்டுவாள் பாரத பண்பை ஊட்டுவாள் தாலாட்டு பாட்டு பாடி தாய்நாடு பற்றை வளர்ப்பாள்.

ஆராரோ பாட்டு பாடி ஆயிரம் கதைகள் சொல்லி பார்போற்ற வாழ்ந்த பெரியோர் பாங்கினை ஓங்கி உரைப்பாள்.

தொட்டிலை ஆட்டும் கைகளே தொல்லுவகை ஆளும் கைகள் என தொட்டிலிலே ஆளுமையை அழகாய் தொட்டு தொட்டு பிட்டு வைப்பாள்.

ஆயகலை அற்புதமாய் கற்பிக்கும் அன்னையின் காலடியில் சொர்க்கம் நேயமுடன் கண்டு அருந்தவ தாயைப் போற்றிப் பணிவோம்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam December month magazine 2023

Post a Comment

0 Comments