மழை & மலை | January 2024 | கவிஞர் மு.அ. அபுல் அமீன்


பனிப்பாறை முழுதும் உருகி விட்டால்

பாங்காய் பாயும் நதிகளின் நீரோட்டம்

தணிந்து குறைந்த நதிகள் வறளும்

தரணி மக்கள் வறட்சியில் வதைபடுவர்


மேற்கு தொடர்ச்சிமலை பல்லுயிர் வாழ்விடம் 

மேலும் அம்மலை அரபிக்கடல் காற்றை

வேற்றிடம் விரையாமல் கர்நாடக கேரளம்

போற்ற மழையாக பொழிய செய்கிறது


கிழக்கு தொடர்ச்சிமலை காலத்தில்

பெய்யும் வட கிழக்கு பருவமழையை

வரவேற்கும் அம்மழை குறைந்தால்

விளைச்சல் குறையும் அம்மழை

பெருகினால் வெள்ளத்தில் மூழ்கும்


அரங்கமாய் விளங்கும் மலைகள் மறைகின்றன 

இமய மலையடி வாரத்தில் அமைந்த

 உத்திரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் 

திட்டமின்றி கட்டப் பட்ட கட்டிடங்கள்

சட்ட நடவடிக்கை இல்லாமல் கணத்தில்

சரிந்து விழுந்து பூமியில் புதைந்தன

திட்டம் தீட்டி மலையைக் காப்போம் 

தீங்கு நீங்கி திருந்தி வாழ்வோம்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam January month magazine 2024


Post a Comment

0 Comments