தமிழர் பெருநாள் | January 2024 | கவிஞர் மீரான்தாசன்

 


தமிழர் போற்றும் திருநாளாம். தமிழினத்திற்கு பெருநாளாம்.

தமிழ் மொழிக்கு கலை கொடுப்பான். 

தன் உரிமைக்கு இடர் வந்தால் களை எடுப்பான்.

ஏர் கலப்பை விவசாய நிலத்தைப் பண்படுத்தும் பிறமொழி கலப்பு தமிழனை புண்படுத்தும்.

பசித்தீர்க்க பச்சை வளர்க்கும் விவசாயிக்கு ஒரு அச்சம். செயற்கை வெள்ளம் அழித்துவிட்டால் ஏது நமக்கு மிச்சம்.

மண்புழு எனும் நண்பனும் இயற்கை உரங்கள் எனும் அன்பனும் இரு கரங்கள்.

மண்ணின் நீர்வளமும், செழிக்கும் நெற்கதிரும் இயற்கையின் வரங்கள்.

தமிழன் தமிழ் மொழியை விடமாட்டான். தாய் மண்ணை எப்போதும் விட்டுத் தரமாட்டான்.

விவசாயிகளின் மனங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். உலகம் எங்கும் இன்பம் பொங்கட்டும்.

- கவிஞர் மீரான்தாசன் 

Published in Nagore Puranam January month magazine 2024

Post a Comment

0 Comments