காலங்கள் பல கடந்தாலும் கண்ட, காட்சிகள் அவ்வளவு எளிதில் கடப்பதில்லை.
பற்பல சிந்தனைகளுக்கு உட்பட்டு, சிற்சில சிதைவுகளுக்கு உள்ளாயிருப்போம்.
உற்ற துணையாய் வருவார்கள் என்றெண்ணிருப்போம்,
உதாசீனங்கள் பல ஏற்றிருப்போம்.
உறக்கம் இல்லா இரவுகளில் உணர்ச்சியற்று அழுதிருப்போம், ஊடல் தேடல் என்பவை உட்புகாத வரை.
ஏக்கங்கள் ஏளனமாய் மாறியிருக்கும்,
ஏமாற்றங்களை பரிசுகளாய் ஏற்றிப்போம்.
நம்பிக்கையில் நம் நாடித்துடிப்பும் சேர்ந்து இருந்ததை அவர்கள் உணரவில்லையா?
இல்லை உணர்ந்தும், உணராதது போல் கண்டுகொள்ளவில்லையா?
இப்படி எத்தனை எத்தனை கேள்விகள்!!
நாற்புறமும்,அவன், அவள் என்று ஓடி களைத்திருப்பீர்கள்!!
சற்று நில்லுங்கள்!!
சற்று சுவாசம் கொள்ளுங்கள்!!
சற்று நிதானம் கொள்ளுங்கள்!!
இதயம் உங்களுக்காகத் தான் துடிக்கிறது என்பதை உணருங்கள்!!
விடை கொடுத்து விடுங்கள் அந்த வித்தகர்களுக்கு, விருப்பம் போல் இருக்கட்டும்!! விரக்தி இல்லாமல்!! விழும் போது விதையென விழுங்கள்!
எழும் போது விருட்சமாய் எழுங்கள்!!!
- கவிஞர் அன்பன்
Published in Nagore Puranam January month magazine 2024

0 Comments