அணு அணுவாக நீ என்னை ரசித்தபோது திக்கு முக்காடி போனேன்!
என்னையும் ஒருத்தி காதல் செய்யக்கூடுமா என்று!
திகைத்துப் போனேன் மீண்டும் !!
அணு அளவு கூட என்னை வேண்டாம் என்று நீ உதறிச்சென்ற போது!
காதலித்தவள் கூட நிரந்திரமில்லையே என்று!
சிறிது தயக்கத்துடன் தான் பிடித்தேன் அன்று!
ஆனால் என்ன விந்தை!!!
அப்பிடியிலிருந்து மீள முடியவில்லை இன்னும்!!!
- முகமது இக்ரம்
Published in Nagore Puranam January month magazine 2024

0 Comments