ஈவ் டிசிங் | கவிஞர் மு.அ. அபுல் அமீன் | January 2026

 


அந்தக் கல்லூரி வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் ஐந்து மாணவர்கள் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

அவர்களை சட்டை செய்யாமல் திரும்பிப் பார்க்காது வேகமாக நடந்தாள் நவீனா.

புள்ளி மான் துள்ளி ஓடுது மச்சி. ஒருவன்.

பள்ளி ஞாபகம் இன்னும் மாறலடி கல்லூரி வந்த நினைவு வந்துட்டா நிமிர்ந்து நடப்பா மற்றொரொருவன்.

புதுசு தானே பவுசு இல்லாமே இருக்கா கொஞ்ச நாள் போனா சொகுசு காட்டுவா மூன்றாமவன்.

கமீஸ் கண்ணைப் பறிக்குது சல்வார் என்னை மயக்குது. நாலாமவன்.

திரும்பிய நவீனா எனக்குக் கராத்தே தெரியும் ஜாக்கிரதை என்று சொல்லிச் சென்றாள்.

கமெண்ட் அடிக்க காத்திருந்த ஐந்தாமவனும் மற்றவரும் கப்சிப் ஆயினர்.

ஐவர் குழு இன்னும் கொஞ்சம் ஆட்களையும் சேர்த்துக் கொண்டு படைகள் புடை சூழ அந்த புதிய பெண்ணைப் பத்து நாட்களாக தேடியும் இவர்களின் கண்ணில் படவில்லை

பதினோராம் நாள் குற்றவியல் வகுப்பிற்கு பேராசிரியர் வரவில்லை கடைசி வரிசையில் ஐவர் குழு.

அந்தக் கிழம் இன்னைக்கு சரியா அறுக்கப்போவுது, குண்டு கண்ணாடி கிளாஸே போர்தான்.

அட்டன்டன்ஸ் கொடுத்துட்டு நழுவிட வேண்டியதுதான்.

சல்வார் கமீஸுடன் பஞ்சாபி க்ஷூ அணிந்த அழகான இளம் பெண்ணைக் கண்டதும் அனைவரும் அமைதி ஆயினர்.

இளம் பெண்களைக் கேலி செய்வது பற்றிய பாடத்தைக் கணீரென்ற குரலில் நடத்தினாள் ஒருவரும் அசையவில்லை இளம் பெண்களைக் கேலி செய்ய தூண்டும் சூழ்நிலை அதன் விளைவுகள் அதற்குரிய தண்டனைகள் பற்றி விரிவாக விளக்கமாக பாடம் நடத்திவிட்டு அமர்ந்தாள் நவீனா.

உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்என்று சொல்லி அமைதயைக் கலைத்தாள் பேராசிரியை.

ஒருவன் எழுந்தான் புது புரபசரா? இல்லை. கெஸ்ட் லெக்சரரா ? விருந்தாளியா ?.

பேராசிரியை எழுந்தாள். என் பெயர் மிஸ் நவீனா M.A.MPhil IPS Assistant Commissioner of police City South.

ஐந்து மாணவர்களும் ஓடோடி வந்து எங்களை மன்னித்து விடுங்கள் என்று அழும் குரலில் கோரஸ் பாடினார்கள்.

இனிமேல் இப்படி நடக்காதீர்கள் என்று எச்சரித்தாள் நவீனா.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam January Month Magazine 2026


Post a Comment

0 Comments