யா ரசுலே | கவிப்பேரொளி சே அப்துல் லத்தீப் நீரை அத்திப்பூ | January 2026

 


உயிரினைய உங்களை

உள்ளத்தில் தாங்கினேன் 

உணர்ச்சியில் மெய்சிலிர்த்தேன் - இனி

ஒவ்வொரு எழுத்திலும் என்னுயிர்

அணுக்களை உரமாக்கி 

கருத்தில் வைப்பேன்.


பயிரனைய தீனுக்குப் 

பாதையாய் உங்கள் உள்ளம் 

பாரெல்லாம் வியந்து போற்றும் - இது

பட்டியல் இட்டுவிட எட்டாத முயற்சிதான் பயகம்பர் வாழ்வின் ஏற்றம்.


தயிருக்குள் வெண்ணையாய்த்

 தமிழுக்குள் இனிமைசுகம் தன்னாலே

 உயிர்சிறப்பை- நான் தக்கபடி 

உரைத்திட தழும்பியேவந்திடும் 

தமிழே இது உன்பொறுப்பே!


வயிறுக்குள் சேர்கின்

வளசக்தி உணவுதான்

வாழ்வுயிர்சிறக்கவைக்கும்- நபிகள்

வாழ்க்கையைஎழுதிடும் வரலாறு

நூலுக்கு வற்றாததமிழ்நிறைக்கும்.


- கவிப்பேரொளி சே அப்துல் லத்தீப் நீரை அத்திப்பூ

Published in Nagore Puranam January Month Magazine 2026

Post a Comment

0 Comments