பைத்தியக்காரனா இவன், ஊரில் வேறு பெண்களா இல்லை
அவள் ஒருத்தியிடமே பைத்தியம் பிடித்து பித்தனாக அலைகிறான்...
வீட்டில் இருந்து புறப்பட்டவன் பெரிய DairyMilk Hazul Nut வாங்கிக் கொண்டு, அந்தப் பெண்ணைப் பார்த்த அதே இடத்திற்குச் சென்றான்.
ஆள் நடமாட்டமே இல்லை தெரு ஜிலோ.. என்று காட்சியளித்தது. காதல் பறவைகள் போல அவள் சென்ற இடத்தை அடி தவறாது பின்பற்றி நடக்கத் தொடங்கினான் ஆனந்த்.
அதே போக்கில் பேருந்து நிலையம் வந்துவிட்டது. எதிர்பாராத விதமாக சரியான மழை ...
புறப்பட தயாராக இருக்கும் பேருந்துகளும் சிறகடிக்க தயாரகும் மக்களும்
நொடி தவறாது அடிக்கும் டிக் டிக் கடிகாரமும் அவனுக்குத் தெரிந்தது..
கா*ல் ஓரிடத்தில் நிற்கவில்லை ..
சிலரின் பார்வை இவன் மேல் இருக்க, இவனின் பார்வையோ ஒருத்தியைத் தேடின.
எல்லாம் ஒர் எதிர்பார்ப்பு தானே..
அவளைக் காண முடியாத ஓர் ஏக்கத்துடன், பேருந்து நிலையத்தில் இருந்து திரும்பினான்.
வீடு சென்றவுடன், ஏன்டா! நனஞ்சி வந்து இருக்க ? கொஞ்ச நேரம் நின்னுட்டு வரலாம்ல, என தாய் திட்டினாள்.
இங்க தாம்மா ப்ரெண்டு வீட்டுக்கு.
என்னடா இது கையில..
உனக்கு தாம்மா வரும் போது சாக்லேட் வாங்குன.
என்னடா புதுசா சாக்லேட் லா, அம்மா மேல அவ்ளோ பாசமாடா...
என கேட்டு உள்ளே சென்றாள்.
அப்படியே சோகமாக சென்று படுத்தான் ஆனந்த்..
- ம. முஹம்மது உஸ்மான்

0 Comments