முகம் மலர அழைப்பு வரும்

முன்னே சென்று நீயும்

முக மலர தொழுதிடலாம்.

முகமதின் சொல் கேட்டு

மூவுலகை வென்றிடலாம்

முடிவில்லா அவர் ஆட்சி

முயன்று நீயும் பார்ஆச்சி.

முத்துக்களாய் வார்த்தைகள்

முத்திரையிட்ட வாக்குறுதிகள்.

முழுமனதாய் முயற்சித்தால் முகமதுவின் பக்கத்தில்.

முக்காலமும் மகிழ்ந்திருக்க முகமதுவின் வழிநடப்போம்

மூதுரை யாய் இதை ஏற்று

முயற்சி நாளும் செய்திடுவோம்.

முப்பாலும் தான் உனக்கு

முக மலர கிடைத்திடுமே

முச்சங்கம் உன் மொழியை

முழுமனதாய் ஏற்கும் மப்ப

- கவிஞர் தி. சுப்ரமணியன்

Published in Nagore Puranam January Month Magazine 2026