முனைவர் எஸ்.ஏ.கே | வாழ்த்து கவிதை | மு.முஹம்மது சுஹைப்

 


புதுக்கல்லூரி தமிழ்த்துறை துணைப் பேராசிரியர், நாகூர் தமிழ்ச் சங்க மேனாள் துணைச் செயலாளர் & நாகூர்ப் புராண மின்னதழின் நிர்வாக ஒருங்கிணைப்பாளரான முனைவர் மீ. செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரிடமிருந்து முனைவர் பட்டம் பெறும் புகைப்படம்.



நாற்திசை புகழும்
நாகூராரின் வரலாற்றை
நற்றமிழில் பாடிய
நான்காம் தமிழ்ச் சங்க
நக்கீரர் இயற்றிய
நல்லதோர் காவியமாம்
நாகூர்ப் புராணம்
நன்னூலைப் பயின்று
நவின்று நெறிப்படுத்திய
நாவரசர் முரளி அரூபன்
வழிகாட்டுதலில்
நாகூர் செய்கு அப்துல் காதிர்
நன்மதிப்போடு
முனைவர் பட்டம் பெறும்
இந்நாள்
நன்னாளாக அமைய
நாயகத்தின் வழிநின்று 
நாயனைத் துதிக்கின்றேன்!

- ✍️ மு. முஹம்மது சுஹைப்

Post a Comment

0 Comments