அன்வரின் துளிகள் | அன்வர் சாஹிப் | April 2024



ஆறுதலுக்கு சொற்களில்லை

அகராதியினைப் புரட்டினேன் 

ஆசிபா உனக்கு ஆறுதல் கூற இயலவில்லை 

என்னால் இன்றளவும் 

ஈர விழிகளுடன் பிரார்த்தனை 

உமக்கு உடன்பிறவா சகோதரன்?

தன்னிகரில்லா தலைவன்

விடுப்பின்றி விரோதிகள் விளையாட

விழிகளில் விடாமுயற்சி விரிந்தாட

ஒருவர் தன்னிகரில்லா தலைவனாய்

தன்னலமற்ற தகப்பனாய்...

செல்வத்துள் செல்வம்

அழியா செல்வத்துடன் 

ஒப்பந்தம் போடும் 

அழியும் செல்வம்...

மறைந்துபோகும் மனிதநேயம்

புண்ணாகும் புவியில் 

மண்ணாகும் மனித நேயம்

சுமைகளான சோதனைகள்

கட்டளை மேல் கட்டளையாய் பயணிக்கிறது வாழ்க்கை எனும் இறைவன் கட்டளை...

நம்பினால் நம்புங்கள்

நாளை நாசமாக்கும் 

நாளும் நாசமாகும் 

நம்பிக்கை இருந்தால்

விபரீத விவகாரம் 

விளையாட்டில் கூட இணையாத மதவெறி விபரீதத்தில் இணைகிறது.

அனுபவத்தின் ஆசிரியர் 

அன்பு தந்தை சொன்னதை அணுஅணுவாய் சொல்லித் தரும் அனுபவம் 

- அன்வர் சாஹிப்

Published in Nagore Puranam April month magazine 2024

Post a Comment

0 Comments