பூத்த புதியமலர் ஒன்று 

புன்னகை புரிந்தது நின்று 

நித்திலம் சூழ்பனி சென்று 

புத்தாண்டு பிறந்தது இன்று.


சித்திரை சிரித்து உரைக்கிறாள் 

புத்தி உள்ள மாணவனே 

நித்தமும் படிப்பது நன்று 

சித்தமுடன் வாழலாம் வென்று.


வித்தகம் கற்று வீரனாகு 

சத்தியம் பேணும் விவேகியாகு

புத்துலகில் புதுமை படைக்க 

எத்தனித்து எட்டு உச்சத்தை.


- கவிஞர் மு.அ. அபுல் அமீன் 

Published in Nagore Puranam April month magazine 2024