நிலையில்லாத உறவு...

நிலையில்லாத வாழ்வு...

நிலையில்லாத பொன்னும் பொருளும்...

வளர்ந்த மரம் பட்டு போகிறது

பூத்த மலர் வாடி போகிறது

உலர்ந்த செடிகள் கருகிப் போகிறது

ஓடிய ஆறுகள் வற்றி போகிறது...

மனிதனே மனிதனை நேசித்துப் பார்

மதிப்பை பார்த்து பழகாதே

நல்ல பழக்கத்தை பார்த்து பழகு

மனிதனை மனிதன் சினம் கொண்டு வாழாதே

மனிதன் இறந்தால் ஒன்றும் இல்லை

மனிதத்தை வாழ வைப்போம்.

புயலின் வேகம் சேதத்தை ஏற்படுத்தும்

வண்டியின் வேகமோ உயிரையே பறித்து விடும்

மது குடித்து மண்ணிலே விழுந்தாயோ

எதிரே வந்தவரை வீழ்த்தி விட்டாயோ

விழுந்தவனின் துணையை விதவை ஆக்கினாயோ

உறவென்று நினைத்தாயோ உதறி சென்றாயோ

செல்போன் பேசினாயோ செல்லரித்து கிடக்கின்றாயோ

அரசு சொல்வதை அலட்சியம் செய்தாயோ

வேகத்தை காட்டினாயோ வேதனை அடைந்தாயோ

கவனத்துடன் ஓட்டிடு குடும்பத்தை என்றும் நினைத்திடு...

- கவிஞர் ஜான் பீட்டர்