Nagore Puranam
எண் காதல் | கவிஞர் ஏ. ஆகாஷ் (கடுக்கலூர்) | May 2026

எண் காதல் | கவிஞர் ஏ. ஆகாஷ் (கடுக்கலூர்) | May 2026

'ஒரு'முறை

என்னைப் பார்த்தாய் நீ

அன்றிலிருந்து

'இரு'தய நடுக்கம்

உன்னிடம் நான்

'மூன்று' வார்த்தைகள்

சொல்வதற்கு

பதட்டமாய் அலைகிறேன்

'நான்கு' வேளையும்

'ஐந்து' நிமிடம்

என்னிடம் நீ

'ஆறு'தலாய்

பேசினால் தான் என்ன?

வாரத்தில்

'ஏழு' நாட்களும் எனக்கு

இனிமையாகுமே

என் கைக்கு

'எட்டு'ம்

தூரத்திலிருந்தும்

'ஒன்பது'

கோள்களைப் போல

என்னையும்

சுற்ற விடுகிறாயே

'பத்து'க்காடாய்

காத்திருக்கிறேன்

முளைக்குமா

உன் காதல் நாற்று.

- கவிஞர் ஏ. ஆகாஷ் (கடுக்கலூர்)

Post a Comment

0 Comments