காத்திரு வருகிறேன் என்றாள்,

காலங்கள் கடந்தது

ஏனோ அவள் வரவில்லை.

தீண்டாமை என்னும் 

தீயில் அகப்பட்டு விட்டாளோ?

அல்லது தீயவர்களின் 

சூழ்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டாளோ?

காரணம் தேடினேன் 

யாதொன்றும் கிடைக்கவில்லை. 

ஆனால் கவலைகள் மட்டும்

எண்ணிலடங்காமல் கிட்டியது.

சிந்தையில் மிகைத்திருந்த 

என் காதலி எங்கு சென்றாளோ?

அதனை எண்ணி 

துடிதுடித்துப் பரிதவித்தேன்.

கண்ணீரும் குளமான காலம் போய்,

அது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் எப்போதும் 

கண்கள் சிவந்தே காணப்பட்டேன்.

நான் மதுவில் மயங்கவில்லை,

மாறாக மாதுவை நினைத்து 

பரிதவித்த உணர்வுகளே 

எனது கண்களின் நிறம்

மாற்றத்திற்கு காரணியாக அமைந்தது.

எப்படியேனும் ஒரு நாள் 

அவள் என்னை தேடி வருவாள் 

என்று காத்திருந்தேன்.

ஒரு நாள் வந்தது

அன்று அவள் வரவில்லை,

மாறாக அந்த ஈசனின் தூதுவன் 

என் உயிரைக் கைப்பற்ற வந்தான்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் 

அவளை எண்ணி 

நான் படும் துயரத்தைக் கலைய 

ஒரேயடியாக ஈசனிடம் சரணடைந்து 

என் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் 

என எண்ணி உயிரை நீத்தேன்.

- மு. முஹம்மது சுஹைப்