Nagore Puranam
இந்திய இரயில்வே வாரம் | April 2026 | மாத இதழ்

இந்திய இரயில்வே வாரம் | April 2026 | மாத இதழ்

 


இந்திய இரயில்வே வாரம் ஆண்டு தோறும் ஏப்ரல் 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகில் அமெரிக்கா ரஷ்யா சீனாவிற்கு அடுத்து நான்காவது பெரியது இந்திய இரயில்வே துறை.

1832 ல் சென்னை ரயில் பாதை திட்டம் முன்மொழியப்பட்டது. 1837ல் இந்தியாவின் முதல் இரயில் சென்னைச் செங்குன்றம் - சிந்தாதிரிப்பேட்டை இடையே கற்களை ஏற்றிச் சென்றது.

16.4.1853ல் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மும்பை போர்பந்தர் தானே இடையே 34 கிலோ மீட்டர் தொலைவிற்கு 400 பயணிகளுடன் ஓடியது. அந்த ரயில் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது. 

1854ல் சென்னை இராயபுரம் வாலாஜா ரோடு இடையே இரயி்ல் ஓடியது.

1901ல் இரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது.

1925ல் இந்தியாவில் முதல் மின்சார இரயில் மும்பை VT குர்லா இடையே ஓடியது.

1951ல் இந்திய இரயில்வே நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

1,35,200 கிலோ மீட்டர் நீள தண்டவாள தடங்களை உடையது. இந்திய இரயில்வே 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

13000 பயணிகள் இரயிலும் 11700 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.  

500 கோடி மக்கள் ஓராண்டில் இரயிலில் பயணிக்கின்றனர்.

இன்று வந்தே பாரத் இரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகிறது.

ஆயினும் டிக்கட் இல்லா பயணிகளைத் தடுத்து அவர்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. 

ஓடும் இரயில்களில் கொள்ளை கொலைகளும் நடக்கின்றன. ஓடும் இரயில்களில் போதிய பாதுகாப்பு இல்லை. 

நவீன வசதிகளை நாளும் வழங்கி பயணிகளின் எண்ணிக்கையைக் கூட்டினாலும் விபத்தில்லா பயணத்திற்கு உறுதி செய்ய முடியவில்லை. முன்னேற்றங்களை முறியடிக்கும் இந்த குறைகள் களையப்பட்டால் இந்திய இரயில்வே இன்னும் உயர்வு பெறும். உலகம் வியந்து பாராட்டும்.

- கவிஞர் மு.அ. அபுல் அமீன்

Post a Comment

0 Comments