Nagore Puranam
பேசாக் காதல் (தொடர் - 05) | ம. முஹம்மது உஸ்மான் | May 2026

பேசாக் காதல் (தொடர் - 05) | ம. முஹம்மது உஸ்மான் | May 2026



விறுவிறுவென கிளம்பினான் ஆனந்த். சாப்பிட்டு போ என அடுப்பறையிலிருந்து அம்மாவின் சத்தம்..

கிளம்பும் முன் கண்ணாடியை நான்கு முறைப் பார்த்திருப்பான்.

நண்பர்கள் பஸ்ஸில் ஏறிக் காத்திருந்தனர். பஸ் கிளம்பிய சில வினாடிகளில் ஓடிப் பிடித்து ஏறி விட்டான். நீ பஸ் மிஸ் பண்ணி இருப்ப என்றான் ரவி.

தம்பி படி-ல நிக்காத மேல ஏறு என்றார் கன்டக்டர். அண்ணே உள்ள எவ்ளோ கூட்டமா இருக்கு பாருங்க!

இங்கேயே காத்து வாங்கிட்டு வர்றோம் என்றான் ஒருவன்.

மச்சா அங்க பாரு ஷாலினி! எப்பவுமே அவ ஆளு தானே பைக்ல கூட்டிட்டு வருவான் இன்னைக்கு என்ன பஸ்ல வர்ரா என சத்தமின்றிப் பேசிக்கொண்டனர்.

பஸ் இறங்கியதும் என்ன மா உன் ஆள் கூட வரல என்றான் வேலு.

இல்லடா நேத்து அவள் கூட சண்ட அதான் நானே வந்துட்டேன் என்றாள் ஷாலினி.

மச்சா சந்தியா ஐடி (IT) டிபார்ட்மென்டு டா. யாருடா... சந்தியா மச்சா நம்ம பையன் கூட போன மாசம் லவ் பண்றேன்னு சுத்திட்டு இருந்தானே என்று மாறனைப் பார்த்து சொன்னான் ஒருவன்.

மச்சா இருங்கடா என்று அங்கிருந்து கிளம்பினான் ஆனந்த்.!

ரேணு ஒன் செகண்ட்.. என்ன ஆனந்த் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? சொல்லுடா.!

அவன் பார்த்த அந்தப் பெண்ணைப் பற்றி விமர்சித்தான்.

அப்படி யாரையாவது நீ பார்த்து இருக்கியா? இல்லையேடா ஏன்?

கேள்விக் கேட்காத ப்ளீஸ்! பஸ் ஸ்டாண்ட்ல பார்த்தேன் ரேணு நம்ம காலேஜ், ஐ திங்க் சோ!

அந்தப் பொண்ணு நம்ம காலேஜ்ல பார்த்தனா எந்த டிபார்ட்மெண்ட்-னு கொஞ்சம் சொல்றியா ப்ளீஸ்.?

சரி டா நான் பாக்குறேன். என்ன ப்ரோ லவ்ஸ் ஆ.! அப்படி லாம் இல்ல ரேணு..

கல்லூரி பெல் அடித்தது...

சரி ஆனந்த் நான் கிளாஸ் போறேன் பாய்..

தொடரும்.....

- ம. முஹம்மது உஸ்மான்

Post a Comment

0 Comments