மறக்க நினைக்கிறோம்
மன்னிக்க தவறுகின்றோம்...
காயங்கள் பட்டு
கண்ணீரும் வருகிறது...
உறவுகள் நினைத்தாலும்
நம்மை துரத்துகிறது
உரசியும் நம்மைப் பார்க்கிறது...
மன்னித்து மறந்தாலும்
சில மனிதர்கள் நம்மைத்
தேள் போல்
கொட்டிக்கொண்டே இருக்கின்றனர்...
நம் வேலை நாம் செய்தாலும்
சிலர் நம்மை சீண்டும் மனிதர்களாக இருக்கின்றனர்...
அடிப்பட்ட காயத்துக்கு
மருந்து போடலாம்
மனக் காயத்துக்கு
மருந்தே இல்லை...
வாழ விடாமல்
வளர விடாமல்
சில மனிதர்கள்
மட்டம் தட்டும்
மனிதர்களும் உண்டு...
மன்னித்தேன் மறந்தேன்
மீண்டும் தேன் குளவியாய்
கொட்டியது...
என் வழியில்
நான் நடந்தேன்
பாம்பாக வந்து
என்னைக் கொத்தியது...
உயர்ந்து சென்றேன்
சில மனிதர்கள்
என்னைச் சரித்து விட்டனர்...
இயேசு சொன்னார்
ஒருவனை ஏழு முறை அல்ல
70 முறை
மன்னியுங்கள் என்றார்...
ஒவ்வொரு மனிதனும்
திருந்தி வாழ்ந்தால்,
மறந்து வாழ்ந்தால்,
மன்னித்து வாழ்ந்தால்
இந்தச் சமுதாயம்
நல்ல ஒரு சமுதாயமாக மாறும்

0 Comments