Nagore Puranam
ஊடகத் தமிழ் | முனைவர் மீ. செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் (தொகுப்பாசிரியர் ) | JULY 2026

ஊடகத் தமிழ் | முனைவர் மீ. செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் (தொகுப்பாசிரியர் ) | JULY 2026

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல. சமூக மாற்றங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கும் வல்லமையுடையது. குறிப்பாக ஊடக மொழி, பொதுமொழியைக் காட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாக்கலும் வேகமெடுத்துள்ள இக்காலத்தில், வாசகர்களைப் புதிய சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களுக்கு ஆயத்தப்படுத்தும் பொறுப்பை ஊடக மொழி ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஊடகத் தமிழின் வளர்ச்சிக்கும் செம்மைக்கும் மொழி ஆளுமைமிக்கவர்கள் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பல துறைகளில் செயல்பட்டவர்கள், மொழியின் எளிமை, தெளிவு மற்றும் வாசக நட்பை வலியுறுத்தினர். மொழி ஆளுமையர்களின் எண்ணற்ற படைப்புகள் ஊடகத் தமிழுக்கான முக்கிய வழிகாட்டிகளாக விளங்குகின்றனர்.

மரபிலக்கணத்தை மதித்தபோதிலும், வாசகர்களின் புரிதலுக்கு இடையூறு ஏற்படுத்தும் அளவுக்கு அதனை இறுக்கமாகப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை மொழி ஆளுமையர்கள் முன்வைக்கின்றனர்.

ஊடக மொழி காலத்தின் தேவைக்கேற்ப நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே பலரது நிலைப்பாடாகும்.

இன்றைய இளைஞர்களிடையே ஆங்கிலச் சொற்களின் அதிகப் பயன்பாடும், ரோமன் எழுத்துக்களில் தமிழை எழுதும் பழக்கமும் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாகும். இம்மாற்றங்கள் தமிழின் எதிர்கால வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்வது காலத்தின் தேவையாகும். இதற்காக சமூகமொழியியல் ஆய்வுகளும் விரிவான விவாதங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழின் அடிப்படைச் சிறப்புகளைப் பாதுகாத்துக்கொண்டு, நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப ஊடக மொழியை வளர்ப்பதே இன்றைய கால அவசியமாகும். அதுவே தமிழ் மொழியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் ஊடகங்களின் சமூகப் பொறுப்புக்கும் உறுதுணையாக அமையும்.

Post a Comment

0 Comments