மாற்றத்தை நோக்கி

மாறுதல் செய்வோம்

மணி முத்துகளாய்

மகிழ செய்வோம்.

ஒரு மனிதன் மாறினால்

ஒரு குடும்பம் மாறும்

ஒரு குடும்பம் மாறினால்

ஒரு சமுதாயம் மாறும்

ஒரு சமுதாயம் மாறினால்

இந்த உலகமே மாறும்.

ஆட்சிகள் மாறுகிறது

அவலங்கள் கூடுகிறது

உறவுகள் மாறுகிறது

பணத்தால் சேருகிறது .

இயற்கைகள் மாறுகிறது

அழிவுகள் அரங்கேறுகிறது

இதயம் மாறுகிறது

வலிகளை கொடுக்கிறது.

மாறுவோம் !

மாற்றத்தைத் தருவோம் !.