பரப்பளவில் உலகப் பட்டியலில் ஏழாவது இடத்திலும், மக்கள் தொகையில் முதலாம் இடத்திலும், வலுவான ராணுவ படைகள், பன்முகக் கலாசாரங்கள் மற்றும் பல்வேறு மொழிகளோடு பண்பட்ட நாடு இந்திய திருநாடு.
நம் தாய்த் திருநாட்டைத் தேசம் என்று அழைப்பதை விட நாடு என்று அழைப்பது தான் பொருத்தமாக அமையும்.
தேசம் என்றால் ஒரு மொழி! ஒரு கலாச்சாரம்! ஒரு குழுவினர்களே பூர்வ குடியினர் ஆவர்.
( A nation is a community of people formed on the basis of a common language, territory, ethnicity etc. A country may be an independent sovereign state or part of a larger state, a physical territory with a government, or a geographic region associated with sets of previously independent or differently associated people )
ஆனால் நம் நாட்டில் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழியாக 22 மொழிகளும், 121 மொழிகள் பேச்சு வழக்கிலுள்ள மொழிகளாகவும் இதனைத் தாண்டி 600 க்கும் அதிகமான மொழிகள் இந்தியாவில் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இருப்பினும் 600 மொழிகளில் ஒரு சில மொழிகள் வாய்மொழியாகவும், அவற்றில் சில மொழிகள் மட்டுமே எழுத்துருவம் பெற்றுள்ளது.அவ்வாறு எழுத்துருவம் பெற்ற மொழிகள் எல்லாம் பேச்சுவழக்கிலும் இல்லை.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற 22 மொழிகள் மட்டுமே பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இன்றளவும் இருந்து வருகிறது.
இத்தகைய மொழிகளை மொழியியல் வல்லுநர்கள் இரண்டாகப் பிரிக்கின்றனர். ஒன்று இந்திய ஆரிய மொழிகள் (Indo-Aryan languages) மற்றொன்று திராவிட மொழிகள் (Dravidian languages)
இந்திய ஆரிய மொழிகள் என்பது டொமரி, பஞ்சாபி, ஹரியான்வி, பிரான்ஜ், உருது, சத்தீஸ்காரி, தன்வாரி, பீஜியா, ஹிந்துஸ்தானி, போஜ்புரி போன்ற வட இந்திய மொழிகள் இடம் பெறும்.
திராவிட மொழிக் குடும்பத்தைப் பொருத்தவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொலாமி, துருவி, பிரகாயுமொழி போன்ற தென் இந்திய மொழிகள் இடம் பெறும்.
சுதந்திரம் அடைந்த இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திலும் உடை, உணவு, கலாச்சாரம், நாகரீக முறைகள் எல்லாம் ஒன்றுக்கு மற்றொன்று வேறுபடும்.
உதாரணமாக தென் இந்திய (தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா) ஆண்களுக்கு வேஷ்டி சட்டை, பெண்களுக்குப் புடவை, உணவு முறைகளில் அரிசி சோறு, விதவிதமான நவதானியங்கள், மசாலா வகைகள்.
வட இந்திய ( மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், இராஜஸ்தான், ஹரியானா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், தில்லி ) ஆண்களுக்குப் பைஜாமா & குர்தா, பெண்களுக்குப் புடவைகள் மற்றும் சுடிதார். அவைகளிலும் ராஜஸ்தானி பெண்கள் கீழாடையும் மேலாடையும் அணிந்து துப்பட்டாவைப் புடவைப் போல் சுற்றிக் கொள்வார்கள். ராஜஸ்தானி ஆண்கள் வேஷ்டி சட்டையை அணிந்து கொண்டு தலைப்பாகைக் கட்டிக் கொள்வார்கள்.
வட இந்தியாவின் பிரதான உணவு மாவு ரொட்டி.
தென் இந்தியாவின் பிரதான உணவு அரிசி.
சமையல் முறை முதல் வாழ்வியல் நெறி வரை வட இந்தியா தென்னிந்தியாவிற்கு முற்றிலும் மாற்றானது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைக் கிருத்தவ நாடு என்பார்கள்.
அரபு அமீரகம், கத்தார், குவைத் போன்றவைகளை இஸ்லாமிய நாடு என்பார்கள்.
பன்முகத்தன்மையே நம் நாட்டின் தனிச்சிறப்பு ! அடையாளம்.
ஆனால் நம் இந்திய திருநாடு மதச்சார்பற்ற குடியரசாக (Secular Republic) அறிவிக்கிறது.
ஆங்கிலம் முதல் 22 மொழிகள் அலுவல் மொழியாக இருக்கின்றனவே அன்றி இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டப்படி தேசிய மொழி என்று எதுவும் இல்லை. அதேபோல், இந்தியா முழுவதற்குமான ஒரே தாய்மொழியும் அறிவிக்கப்படவில்லை.
ஒவ்வொரு இந்தியரும் தமது தாய்மொழியைப் பேணிப் பாதுகாக்கும் உரிமைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு பன்முக மொழிகளும், பல்வேறு குழு & இனங்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த இந்திய திருநாடு 80ஆவது ஆண்டு விடுதலைப் பெற்ற நாள் வருகின்ற 15ஆம் நாள்.
அடிபணியாதே! என்றார் அகிம்சையைத் தன்வழியாக போதித்த மகாத்மா காந்தி.
அடி ! பணியாதே! என்றார் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட இந்திய தேசிய ராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
படி ! பணியாதே ! என்றார் நவீன கல்வி & அறிவியல் சிந்தனை முன்னோடி சர் செய்யது அஹ்மத் கான்.
இவ்வேளையில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் இம்மூன்று நபர்களை நெஞ்சில் நினைத்துப் போற்றி அவர் வழி நின்று இந்தியாவை வல்லரசாக்கி வென்றெடுப்போம்!
இந்நாட்டின் இறையாண்மையையும், மதச்சார்பின்மையையும், பன்முகத்தன்மையையும் எவ்வித சாதி, மத, இனப்பாகுபாடு பாகுபாடுகளால் பிளவுபடாமல் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுப்போம்! நாம் அதை ஏற்போம் !

0 Comments